திடீர் மூச்சுத்திணறல்.! கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி.!

திடீர் மூச்சுத்திணறல்.! கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி.!


vijayakanth admited in hospital

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் நடந்துமுடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடவில்லை. ஆனாலும், பிரசாரத்துக்காக சென்ற அவர் எதுவும் பேசாமல் தொண்டர்களிடம் வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சென்னையிலுள்ள மியாட் மருத்துவமனையில் அதிகாலை 3 மணியளவில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மூச்சுத்திணறல் காரணமாக விஜயகாந்த் இன்று அதிகாலை 3 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.