தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி முடிவு.!



vijayabaskar called retired doctors

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சுகாதாரத்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றினை எதிா்கொள்ள போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் அறிவித்தாா்.

coronaஇந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் 100 தனி வார்டு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சமூக பரவலாக நோய் தொற்று ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரை தயார் நிலையில் இருக்க, கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.