கொண்டாட்டங்கள் வேண்டாம்.. உடனே இதை செய்யுங்க.! கட்சி நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் உத்தரவு.!Vijay ordered to avoid his birthday celebration

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதியிலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கள்ளசாராய மரணத்திற்கு அரசு நிர்வாகத்தின் அலட்சியம்தான் காரணம் என நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் குற்றம்சாட்டியிருந்தார்.

கள்ளக்குறிச்சிக்கு சென்ற விஜய் 

மேலும் விஷ சாராயத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் அவர் நாளை தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க கோரி நிர்வாகிகளுக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: #BigBreaking: "அரசு நிர்வாகத்தின் அலட்சியமே கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு காரணம்" - த.வெ.க தலைவர் விஜய் பகிரங்க குற்றசாட்டு.! 

vijay

விஜய் பிறப்பித்த உத்தரவு 

அதில் அவர், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு தலைவர் விஜய் அவர்கள் உத்தரவு! தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து 
தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 

எனவே தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: #Breaking: 38 பேர் பலியான விஷசாராய விவகாரம்; பார்வை குறைபாடை சந்திக்கும் நோயாளிகள்.. கண்ணீரில் உறவினர்கள்.!