விஜய் குறித்த ரகசியத்தை தெரிந்து கொள்ள மீரா மிதுனை சந்தித்த விஜய் அப்பா.. என்ன நடக்குது..? ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் குறித்த ரகசியத்தை தெரிந்து கொள்ள மீரா மிதுனை சந்தித்த விஜய் அப்பா.. என்ன நடக்குது..? ரசிகர்கள் அதிர்ச்சி


Vijay father met meeraa mithun viral twit

நடிகை மீரா மிதுனை நடிகர் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் சந்தித்துள்ள தகவல் கோடம்பாக்கத்தில் வைரலாக பேசப்பட்டுவருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன் நடிகர் விஜய் மற்றும் சூர்யா குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசிவருகிறார். அதுமட்டும் இல்லாமல் விஜய் மற்றும் சூர்யாவின் மனைவிகள் குறித்தும் அவர் மிக மோசமான பதிவுகளை வெளியிட்டுவந்தது அனைவரும் அறிந்ததே.

Meera mithun

மேலும் விஜய் ஒரு மாபியா என்றும் அவர் வைத்ததுதான் சட்டம் எனவும், தனது வளர்ச்சியை கெடுப்பதே அவர்தான் எனவும் விஜய் மீது பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் மீரா மிதுன். இதனிடையே விஜய் மற்றும் அவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகர் இடையே அரசியல் கட்சி தொடங்குவது குறித்து சமீப காலமாக பனிப்போர் நடந்துவருகிறது.

இதனால் சந்திரசேகர் விஜய்யை மறைமுகமாக தாக்கிப் பேசி வரும் நிலையில் அவர் திடீரென நடிகை மீரா மிதுனை சந்தித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மீரா மிதுன் "நன்றி சந்திரசேகர், விஜய்யை சுற்றியுள்ள மாபியா பற்றி கூறியதாகவும், தான் கூறிய அறிவுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்."

Meera mithun

ஏற்கனவே விஜய் பற்றி பல ரகசியங்கள் தனக்கு தெரியும் எனவும் விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவேன் எனவும் மீரா மிதுன் கூறிவந்த நிலையில் விஜய்யின் தந்தை அவரை சந்தித்தது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.