ஏற்கனவே உயிரிழந்த தாய்! மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தந்தை! தவித்து நின்ற அப்பாவி குழந்தைகள்! ஓடி உதவிய விஜய் ரசிகர்கள்!

ஏற்கனவே உயிரிழந்த தாய்! மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தந்தை! தவித்து நின்ற அப்பாவி குழந்தைகள்! ஓடி உதவிய விஜய் ரசிகர்கள்!


vijay fans help to child family

கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்துள்ள மழையூர் கிராமத்தை சேர்ந்த கருப்பைய்யா என்ற லோடுமேனாக கூலித்தொழில் செய்துவந்த நபர், மின்கம்பி கீழே அறுந்து கிடப்பதை பார்க்காமல், மின் கம்பியில் கால்களை வைத்துள்ளார். அவர்மீது மின்சாரம் பாய்ந்ததால் துடித்தபடி அலறல் சத்தம் போட்டுள்ளார்.

 அப்போது அவருடன் வந்த நாய் அவரை காப்பற்ற முயற்சித்து, அவரின் ஆடையை கடித்து அவரை காப்பாற்ற முயன்றுள்ளது. ஆனால் நாய் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே கருப்பைய்யா மற்றும் அவர் வளர்த்த பாசமுள்ள நாய் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

vijay fans

கருப்பைய்யாவின் மனைவி 5வருடத்திற்கு முன்பே உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்ட நிலையில், தற்போது இவர்களின் மகன் மற்றும் மகள், தாயையும் தந்தையும் இழந்து தவித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி விஜய்மக்கள் இயக்கத்தினர், அந்த குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிதி உதவியும் வழங்கிருக்கிறார்கள். இந்த ஊரடங்கு சமயத்தில், தாய் தந்தையை இழந்து தவித்துவரும் அப்பாவி குழந்தைகளை அரசியல் கட்சிகள் கூட கண்டுகொள்ளாத நிலையில், விஜய்மக்கள் இயக்கத்தினர் செய்த உதவியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.