தமிழகம்

பாலியல் வன்கொடுமைக்கு பலியான சிறுமி ஜெயப்ரியாவின் குடும்பத்திற்கு, நிதியுதவி செய்த விஜய் ரசிகர்கள்!

Summary:

Vijay fans gave fund to child jayapriya family

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தை சேர்ந்த நாகூரான் என்பவரது 7வயது மகள் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இச்சம்பவம் தொடர்பாக போலீசார்  அப்பகுதியை சேர்ந்த பூ கட்டும் தொழிலாளியான 29 வயது நிறைந்த ராஜேஷ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது சிறுமியைத் தான்தான்  வன்கொடுமை செய்து அடித்துக்கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து, ராஜேஷை போலீசார் கைது  செய்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு பல பிரபலங்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிறுமியை இழந்து வாடும் அவரது பெற்றோரை நேரில் சந்தித்து புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆறுதல் கூறியுள்ளனர். மேலும் சிறுமியின் குடும்பத்தாருக்கு ரூ.50,000 நிதியுதவியும்  அளித்துள்ளனர். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையாக தண்டனை கொடுக்கவேண்டுமெனவும்  கூறியுள்ளனர்.


Advertisement