2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனாவுக்கு பலியான பெண் மருத்துவர்!! சுகாதார துறையினர் ஆய்வு..

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனாவுக்கு பலியான பெண் மருத்துவர்!! சுகாதார துறையினர் ஆய்வு..


Vellore women doctor dead for corona even she takes 2 dose corona vaccine

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அருகே உள்ள அரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஹேமலதா (47). வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2016 ஆன் ஆண்டு முதல் மருத்துவராக பணியாற்றிவந்துள்ளார். இந்நிலையில் மருத்துவர் ஹேமலதா இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுகொண்டநிலையிலும் கடந்த மே மாத இறுதியில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

கடந்த 40 நாட்களுக்கு மேலாக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து, வேலூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பழநின்று மருத்துவர் ஹேமலதா உயிரிழந்தார். இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுகொண்டநிலையிலும் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளநிலையில், அவருக்கு சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்ததாகவும், நோய் மிக தீவிரமாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள சுகாதாரதுறை அதிகாரிகள், தடுப்பூசி போட்ட பிறகும் டாக்டர் ஹேமலதா எப்படி இறந்தார்? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வின் முடிவில் மருத்துவர் இறந்ததற்கான காரணம் குறித்து தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டபிறகும் மருத்துவர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.