ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
காப்பகத்தில் 17 வயது சிறுமி பலாத்காரம்.. நிர்வாகியின் மகன் அதிர்ச்சி செயல்.. விசாரணையில் பேரதிர்ச்சி.!
பெற்றோரை இழந்து காப்பகத்தில் தங்கியிருந்து படித்து வந்த 17 வயது சிறுமியை, காப்பக நிர்வாகியின் திருமணமான மகன் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் சோளிங்கரில் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, பெற்றோரை இழந்து சோளிங்கரில் இருக்கும் தனியார் காப்பகத்தில் தங்கியிருக்கிறார். மேலும், அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
தனியார் காப்பகத்தை நடத்தி வருபவரின் மகன் கார்த்திக் (வயது 28). இவனுக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். தந்தையின் காப்பகத்தை கண்காணிக்க கார்த்திக் அவ்வப்போது அங்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், காட்பாடியை சேர்ந்த 17 வயது சிறுமியின் மீது கவனத்தை திருப்பிய காமுகன், சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து தன் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறான். பின்னர், ஆசை வார்த்தை கூறியவாறு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
மேலும், ஒருகட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவன், 2 முறை சிறுமியிடம் அத்துமீறி இருக்கிறான். கடந்த சில மாதத்திற்கு முன்னதாக நிர்வாக பிரச்சனையினால் காப்பகம் மூடப்பட்ட நிலையில், சிறுமி காட்பாடியில் உள்ள விடுதிக்கு மாறி வந்துள்ளார்.
அங்கு தங்கியிருந்து சிறுமி பயின்று வந்த நிலையில், கார்த்திக் மாணவியை சந்திக்க அவ்வப்போது வந்து சென்றுள்ளான். இதனை கவனித்த காப்பக நிர்வாகிகள், சிறுமியை விசாரித்து இருக்கின்றனர். அப்போது, கார்த்திக்கின் சுயரூபம் தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த காப்பக நிர்வாகிகள் காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.