நாட்டாமை வந்தால்தான் திருமணம்; வேலூர் மலைக்கிராமத்தில் இப்படியும் கட்டுப்பாடு.. நின்றுபோன திருமணம்.!



Vellore Marriage Stopped 

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைக்கல் மலைக்கிராமத்தில், இன்றளவும் அவர்களது முன்னோர் வழிப்படி பாரம்பரியமாக பல சடங்குகளை கடைபிடித்து வருகின்றனர். 

இந்நிலையில், அவ்வூரின் வழக்கப்படி எந்த திருமணம் நடந்தாலும், அதற்கு நாட்டாமையே தாலி எடுத்து கொடுப்பார். நிலையில், சம்பவத்தன்று நாட்டம் சங்கர் தனது அண்ணன் மகன் திருமணத்திற்கு பொருட்கள் வாங்க வேலூர் சென்றுள்ளார். 

vellore

அப்போது, அவரின் மீது இருந்த வழக்குப்பதிவு காரணமாக, விசாரணைக்காக அவரை காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டவர் ஜாமினில் விடுவிக்க இயலவில்லை.

இதனால் நாட்டாமை வந்து தாலி எடுத்து கொடுக்க இயலாத நிலை ஏற்படவே, கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திருமணம் தடைபட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் புதுமண ஜோடிகள் வேதனை அடைந்துள்ளானார்.