பொது இடத்தில் சரக்கடிதத்தை தட்டிக்கேட்டவரை தாக்கி, 2 சவரன் சங்கிலியை பறித்து சென்ற பயங்கரம்.!

பொது இடத்தில் சரக்கடிதத்தை தட்டிக்கேட்டவரை தாக்கி, 2 சவரன் சங்கிலியை பறித்து சென்ற பயங்கரம்.!


vellore-drunken-men-thieft-a-chain

கடைக்கு முன் மது அருந்தியதால் தட்டிகேட்டவரை தாக்கி, 2 சவரன் தங்க சங்கிலியை பறித்த போதை ஆசாமிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் உள்ள ஒரு கடையில் கோவிந்தன் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், தான் வேலை பார்க்கும் கடையின் முன் போதை ஆசாமிகள் சிலர் மது அருந்தியதால் அவர்களை தட்டி கேட்டுள்ளார்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மது போதையில் இருந்த போதை ஆசாமிகள் கோபமுற்று தாக்கி, அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க சங்கிலியை பறித்து தப்பி ஓடியுள்ளனர்.

vellore

பின் இது குறித்து காவல்துறையினரிடம் இளைஞர் புகார் அளித்த நிலையில், அருகிலிருந்தவர்கள் எடுத்த வீடியோவை ஆதாரமாக கொண்டு 2 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.