பெண் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை.. வேலூரில் சோகம்.! 

பெண் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை.. வேலூரில் சோகம்.! 


Vellore Armed forces Woman Officer Suicide at Home Police Investigation

வேலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை காவல்துறையில் பணியாற்றி வருபவர் இந்துமதி (வயது 26). இவரின் கணவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகள் இருவரும் தாயுடன் வேலூர் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். கிருஷ்ணமூர்த்தி அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்வார்.  

vellore

இந்நிலையில், வீட்டில் இந்துமதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் வேலூர் தெற்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இந்துமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.