பொறித்த மீன் சாப்பிட்டு உடல்நலக்குறைவு.. தந்தையின் அலட்சியம்.. துடிதுடித்து இறந்த 2 பிஞ்சுகள்.!



Vellore 2 Children Died After Eating Fish Dish Made in Hotel

கடையில் வாங்கி வந்த பொரித்த மீனை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் உள்ள கஸ்பா பஜார் பகுதியை சேர்ந்தவர் அன்வர். இவரது மனைவி சுரையா. இந்த தம்பதிக்கு 4 வயதுடைய ஆப்ரீன் என்ற குழந்தையும், மூன்று வயதுடைய அசன் என்ற குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 7ஆம் தேதி பணிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய ஆட்டோ ஓட்டுனர் அன்சர், சாலையோர கடையில் விற்பனை செய்த பொரித்த மீன்களை வாங்கி வந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். 

இந்த மீன்களை சாப்பிட்ட குழந்தைகள் இருவரும் முட்டையை சாப்பிட்டுவிட்டு உறங்கியதாக கூறப்படும் நிலையில், இரவு 11 மணிக்கு மேல் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு உள்ளனர். மறுநாள் காலை நேரத்தில் ஆப்ரின் மற்றும் ஆசனை தர்காவுக்கு அழைத்துச் சென்று அன்வர் தாயத்து கட்டி விட்டுள்ளார். 

பிறகு மருத்துவர்கள் பரிந்துரை இன்றி அங்குள்ள மெடிக்கலில் மாத்திரை மற்றும் டானிக் வாங்கி வந்து குழந்தைகளுக்கு கொடுத்ததாக தெரிய வருகிறது. இந்த மாத்திரையை சாப்பிட்ட குழந்தைகள் இருவரும், சிறிது நேரத்திலேயே மயங்கி சுயநினைவை இழக்க, ஆட்டோ மூலமாக குழந்தைகளை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

hotel

அங்கு குழந்தைகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்களிருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த பெற்றோர்கள் குழந்தையின் உடல் அருகே கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குழந்தைகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், குழந்தைகளின் இறப்பு தொடர்பான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கஸ்பா பஜார் பகுதியில் சுகாதார துறையினர் வீடு வீடாக சென்று குடிநீர் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். தாமதமான சிகிச்சை காரணமாகவும் குழந்தைகள் உயிரிழந்து இருக்கலாம் என்றும் தெரியவருகிறது.