பாஜகவில் இணைந்த வீரப்பனின் மகள்! பரபரப்பாக பேசும் அரசியல் வட்டாரங்கள்!

பாஜகவில் இணைந்த வீரப்பனின் மகள்! பரபரப்பாக பேசும் அரசியல் வட்டாரங்கள்!


Veerapan daughter in bjp

கிருஷ்ணகிரியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் முன்னிலையில் சந்தன கட்டைகள் கடத்தல் மன்னன் வீரப்பனின் மகள் வித்தியா சனிக்கிழமை தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். 

ஒருகாலகட்டத்தில் அரசையே கலங்கடித்த வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன் ஏழை மக்களுக்கு உதவி செய்ததால் இன்றளவும் பல மக்கள் காட்டு ராஜா எனவும் அவரை புகழ்ந்து வருகின்றனர். ஆனாலும் சிலர் அவரை சந்தன கடத்தல் வீரப்பன் எனவும் அழைத்து வந்தனர்.

veerapan

 வீரப்பன் - முத்துலட்சுமி தம்பதிக்கு விஜயலட்சுமி, வித்யாராணி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் வித்யா ராணி வழக்கறிஞராக உள்ளார். இவர் தற்போது பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

எம்.ஏ ஆங்கிலம் படித்து வரும் விஜயலட்சுமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் திருமாவளவனுடன் கொடியை பிடித்தபடி உள்ள புகைப்படம் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வந்தது. இந்தநிலையில் தற்போது மூத்த மகள் வித்யாராணி கிருஷ்ணகிரியில் முரளிதரராவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்திருப்பது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.