கடவுளாக மாறிய தனியார் பேருந்து ஓட்டுநர்., நூலிழையில் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி.. பகீர் காட்சிகள்.!
நொடியில் இருசக்கர வாகன ஓட்டியின் உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணயத்தில் இருந்து, திருத்துறைப்பூண்டி நோக்கி ஆர்.எஸ் மணி எனும் தனியார் பேருந்து ஒன்று கடந்த அக்.28 அன்று பயணம் செய்தது.
இதையும் படிங்க: நீரில் மூழ்கடித்து பெண் கொலை.!! போக்சோ குற்றவாளி வெறி செயல்.!!
இந்த பேருந்து, அங்குள்ள கட்டிமேடு பகுதியில் சென்றுகொண்டு இருந்தபோது, பேருந்துக்கு முன்னால் சென்ற இருசக்கர வாகன ஓட்டி, திடீரென நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.
நொடிப்பொழுதில் சுதாரிப்பு
பேருந்தும் வேகமாக சென்றுகொண்டு இருந்த நிலையில், இதனை சற்றும் எதிர்பாராத பேருந்து ஓட்டுநர் உடனடியாக நொடிக்கும் குறைவான வேகத்தில் சுதாரித்து பேருந்தை இடப்புறம் திருப்பினார்.
சாலையின் இடப்புறம் யாரும் இல்லாத நிலையில், சாலையோர பள்ளத்தில் இறங்கிய பேருந்து நின்றது. இருசக்கர வாகன ஒட்டி, நூலிழையில் அதிஷ்டவசமாக உயிர்தப்பி இருந்தார்.
வீடியோ வைரல்
இந்த விஷயம் குறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தனியார் பேருந்து ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஓட்டுனருக்கு பாராட்டுக்கள்
இதையும் படிங்க: நெல்லை: அச்சச்சோ.. நெஞ்சமெல்லாம் பதறுதே.. திடீரென வாகனத்தில் பாய்ந்த மாடு.. கல்லூரி மாணவி படுகாயம்..! வாகன ஓட்டிகளே கவனம்.!