26 பெண்களிடம் மோசடி செய்து, குண்டரில் கைதான அரசியல்கட்சி பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்: விசிக தலைமை அதிரடி.! 

26 பெண்களிடம் மோசடி செய்து, குண்டரில் கைதான அரசியல்கட்சி பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்: விசிக தலைமை அதிரடி.! 



vck-salem-supporter-gayatri-dismissed-from-party-after

 

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வித்யா நகர் பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி (வயது 42). இவர் விசிக கட்சியில் முக்கிய பிரமுகராக இருந்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவித்தொகை பிரிவில் வேலை பார்த்து வருவதாக கூறி அரசு வேலை மற்றும் உதவி தொகைகளை பெற்று தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்திருக்கிறார். 

26 பெண்களிடம் மோசடி நடந்தது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரின் விசாரணையில் உறுதியாகவே, அதிகாரிகள் காயத்திரியின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவரது கூட்டாளிகளான ஓட்டுநர் ராஜசேகர் (வயது 32), அசோக் குமார் (வயது 39) ஆகியோரின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இவர்கள் அனைவரும் சென்னையில் பதுங்கியிருந்தபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் மீது குண்டர் சட்டமும் பாய்ச்சப்பட்டது. இந்நிலையில், விசிக பிரமுகரான காயத்ரி, அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளார்.