BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பராமரிப்பாளரை தாக்கிய வெள்ளைப்புலி... வண்டலூர் பூங்காவில் சம்பவம்.!
வெள்ளைப்புலிக்கு உடல்நிலை பரிசோதனை மேற்கொள்ள முயன்றபோது, தனது பராமரிப்பாளரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரியவகை உயிரினமான நகுலன் என்ற வெள்ளைப்புலி ஒன்று உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உணவு எதுவும் உட்கொள்ளாமல் புலி அவதியுற்று வந்ததால், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவருடன் அதன் பராமரிப்பார் சென்றுள்ளார்.
மேலும், பராமரிப்பாளர் செல்லையா புலியின் கழிவுகளை ஆய்வு செய்வதற்காக அதன் ஆசனவாய்ப் பகுதியில் மாதிரிகளை சேகரிக்க முயன்றுள்ளார். அப்போது புலி திடீரென மிராண்ட நிலையில், கூண்டு சரியாக அடைக்கப்படாததால் செல்லையாவை தாக்கியுள்ளது.

அப்போது செய்வதறியாது திகைத்த அவர் கீழே விழுந்த நிலையில், பூங்கா ஊழியர்கள் அவரை உடனடியாக மீட்டு புலியை கூண்டில் வைத்து அடைத்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் பராமரிப்பவர் செல்லையா தற்போது நலமாக இருக்கிறார் என்று வண்டலூர் உயிரியல் பூங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.