ஆத்தீ.. ஒரு மாதம் இவ்வளவா!! மகன்களுக்காக ஆர்த்தி கேட்ட ஜீவனாம்சம்.! நடிகர் ரவி மோகன் கொடுப்பாரா??
#Breaking: What Bro?-வுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் அளித்த பதில்.. திமுக அரசுக்கு கண்டனம்.!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன், "புதிய கல்விக்கொள்கை இந்திய மாணவர்கள் அனைவரும் ஒரே கல்வி திட்டத்தில் படிப்பார்கள். உள்ளூரில் தேவையை புரிந்துகொண்ட தொழிலை கருக்கொள்ளலாம். பல மொழிகளை பேசும் மக்களை உள்ளடக்கிய இந்தியா, 3 மொழிகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முயற்சயை கல்வித்துறை வாயிலாக மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தனியார் பள்ளிகள், வசதி வாய்ந்த பெற்றோர் சிபிஎல்சி பள்ளிகளில் 3 மொழி இருக்கிறது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் அது கிடைக்க வேண்டும். திமுக அதனை மொழிப்போர் என மக்களை திசைதிருப்ப முயற்சிக்கிறது.
இதையும் படிங்க: தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாள் இன்று.. பாஜக அண்ணாமலை, தவெக விஜய் வாழ்த்து.. விபரம் உள்ளே.!
மக்களை திசை திருப்பும் திமுக
ஹிந்தி மொழி திணிக்கப்படுவதாக விஷயம் திசைதிருப்பப்படுகிறது. பணக்கார மாணவர்களுக்கு கிடைக்கும் விஷயம், ஏழை மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தொகுதி வரையறை என புதிய பிரச்னையை கிளப்பி விடுகிறார்கள்.
தமிழகத்தில் சீரழிந்து இருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மாற்ற, திமுக அரசு நாடகம் ஆடி மக்களை திசைதிருப்புகிறது. ஒருபோதும் தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள். உண்மை மறையாது. அனைத்து விஷயத்தையும் பாஜக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும்.
தவெக பேச்சுக்கு பதில்
திமுகவின் பாரம்பரியம் என்பது தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசுவது. இந்திய ஆட்சிப்பணியில் உயரிய பெயர் எடுத்தவர் அண்ணாமலை, அவரை பார்த்து தரம் தாழ்ந்த விமர்சனத்தை திமுக முன்வைக்கிறது எனில், அவர்களின் தரம் அவ்வுளவே ஆகும்" என பேசினார்.
தவெக தலைவர் விஜய் மத்திய அரசுக்கு எதிராக பேசியதுதொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, வானதி ஸ்ரீனிவாசன் பதில் அளிக்கையில், "ப்ரோ அவுங்களே பதில் சொல்வாங்க ப்ரோ" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீரியம் தெரியாத விஜய்க்கு பதில் சொல்லனுமா? - அமைச்சர் சிவசங்கர் காட்டம்.!