BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பெட்ரோல் விலை உயர்வு.! கவிஞர் வைரமுத்துக்கு டஃப் கொடுத்த பாடல் வரிகள்.! அவரே பகிர்ந்த பதிவு.!
தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 91.68 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 85. 01 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
நாளுக்கு நாள் பெட்ரோல் டீசலின் விலை உயர்ந்துவருவதால் கடும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. பல மாநிலங்கலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டங்களும் எழுந்து வருகின்றது. அதேபோல் பெட்ரோல் விலை உயர்வை மேற்கோள்காட்டி மீம்ஸ்களும் பகிரப்பட்டு வருகின்றன.
என் பாட்டு வரியை மாற்றி
— வைரமுத்து (@Vairamuthu) February 17, 2021
எனக்கே அனுப்புகிறார்கள் :
'காதல் வந்தால் சொல்லி அனுப்பு;
பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’#PetrolDieselPriceHike
இந்தநிலையில், கவிஞர் வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு; பெட்ரோல் இருந்தால் வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.