இந்த மூன்று கூட்டணியால்தான் கொரோனோவை வெல்ல முடியும்! கவிஞர் வைரமுத்து என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

இந்த மூன்று கூட்டணியால்தான் கொரோனோவை வெல்ல முடியும்! கவிஞர் வைரமுத்து என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!


vairamuthu-lyrics-about-beat-the-corono

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி தட்டுப்பாடு போன்றவற்றால் ஏராளமானோர் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் கடுமையான பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

தமிழகம் முழுவதும் தற்போது சில தளர்வுகளுடன் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது.  இதற்கிடையில் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறினால், ஊரடங்கு தளர்வு திரும்பப் பெறப்படும். மக்கள் காவல்துறையின் கண்காணிப்பு இல்லாமலேயே கட்டுப்பாடுள்ள மக்களாக இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கொரோனாவை வெல்வது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் காக்கும் அரசு, கட்டுப்படும் மக்கள், தடையில்லாத் தடுப்பூசி இந்த முக்கூட்டணியால் மட்டுமே கொன்றழிக்கும் கொரோனாவை வென்றெடுக்க முடியும் என பதிவிட்டுள்ளார்.