ஹே சந்திரயான்! நிலவில் நீ மடியேறு, நாளை நாங்கள் குடியேற; கவிஞர் வைரமுத்துவின் வரிகள்!!

ஹே சந்திரயான்! நிலவில் நீ மடியேறு, நாளை நாங்கள் குடியேற; கவிஞர் வைரமுத்துவின் வரிகள்!!



vairamuthu-about-chandrayaan-3

டந்த 17-ஆம் தேதி அன்று நிலவின் சுற்று வட்டப்பாதையில் இருந்த சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான கட்டத்தை மேற்கொண்டது.

இதில், விக்ரம் லேண்டர், விண்கலத்திலிருந்து வெற்றிகரமாக பிரிந்து, நிலவின் முதல் படங்களை பகிர்ந்திருந்தது. அதன் பின் கடந்த 18-ந்தேதி அன்று விண்கலத்தில் இருந்து பிரிந்த பிறகு லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, நேற்று அதிகாலை 2 மணியளவில் லேண்டரின் சுற்றுவட்டப்பாதையானது  இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23-ந்தேதி அன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படங்களை தற்போது இஸ்ரோ வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், நாளை (23.08.2023) சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனை கவிஞர் வைரமுத்து, கவிதைகளால் கோர்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்:- 

நேரம் நெருங்க நெருங்க மூளைக்குள் வட்டமடிக்கிறது சந்திரயான்; நிலவில் அது மெல்லிறக்கம் கொள்ளும்வரை நல்லுறக்கம் கொள்ளோம்; லூனா நொறுங்கியது
ரஷ்யாவின் தோல்வியல்ல விஞ்ஞானத் தோல்வி; சந்திரயான் வெற்றியுறின்அது இந்திய வெற்றியல்ல, மானுட வெற்றி; ஹே சந்திரயான்! நிலவில் நீ மடியேறு, நாளை நாங்கள் குடியேற; என்று மொழித்திருந்தார்.