கடன் வழங்க தாமதமானதால் ஆத்திரம்; வங்கி மேலாளர் மீது தாக்குதல்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி செயல்.!

கடன் வழங்க தாமதமானதால் ஆத்திரம்; வங்கி மேலாளர் மீது தாக்குதல்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி செயல்.!


Uttarpradesh Kushinagar Bank of Baroda Branch Manager attacked By Customer Who Want Loan 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள குஷிநகர் பேங்க் ஆப் பரோடா வங்கியில், மேலாளராக பணியாற்றி வருபவர் நவநீத் குமார். 

இவரிடம் அப்பகுதியை சேர்ந்த நபரொருவர் வங்கியில் இருந்து கடன் கேட்டு இருக்கிறார். வங்கி தரப்பில் ஆவணங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு கடன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

இதற்கான அவகாசம் முடிவதற்குள், வங்கிக்கு சென்று கடன் வழங்குமாறு அதிகாரிகளுக்கு தொல்லை கொடுத்தவர், பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய வங்கியின் மேலாளரை இடைமறித்து தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து வங்கியின் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.