சென்னையில் வீடு வீடாக வாசலில் வீசப்படும் பணம்..! என்ன காரணம்..? வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி என்ன.?



unknown-persons-through-money-in-chennai-areas-video-go

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவை கட்டுபடுத்த அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாட்டும் தமிழகத்தில் ஒரே நாளில் 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corono

இந்நிலையில், சென்னையில் வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், BUSHINDIA என்ற டிவிட்டர் பயனர் வெளியிட்டுள்ள வீடியோ ஓன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சென்னை வீதிகளில் சைக்கிளில் வரும் நபர்கள் கொரோனாவை பரப்பும் விதமாக ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் 20 ரூபாய் பணத்தை வீசி செல்வதாக பெண் ஒருவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

ஆபத்தான சமயத்தில் நாம்தான் பாதுகாப்பாக இருக்கவேண்டும் எனவும் அந்த பெண் கூறியுள்ளார். உண்மையில் நடந்தது என்ன? சைக்கிளில் வந்த நபர்கள் யார்? கொரோனாவை பரப்ப இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டனரா? இந்த வீடியோவின் நோக்கம் என்ன எந்த எந்த தகவல்களும் இல்லை.