10 ஆம் வகுப்பு படிக்கும் அண்ணன் மகளை, கடத்திச்சென்று குடும்பம் நடத்திய சித்தப்பா!. விசாரணையில் உறைந்து போன காவல்துறையினர்!.



uncle arrested for kidnapping brother's daughter


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி குருந்திரக்கோட்டையை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி. இவருக்கு ஊட்டி குன்னூரை சேர்ந்த கங்காதரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 

ஜோதிலட்சுமி - கங்காதரன் தம்பதியினருக்கு 15 வயது மகள் இருக்கிறார். அவர் ராஜேந்திரபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு, தனது சைக்கிளில் சென்றுள்ளார். 

பள்ளி சென்ற மாணவி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் ஜோதிலட்சுமி அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் மாணவியை தேடிவந்த நிலையில், சிறுமியின் சித்தப்பா ரமணிதரன் என்பவர் மாணவியை மிரட்டி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது.

உடனடியாக மாணவி மீட்கப்பட்டு தாய் ஜோதிலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டார். சித்தப்பா ரமணிதரனை பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.