#கடலூர் : ஆடி, பாடி வரவேற்பு.. அதிகாலையில் ஓட்டம் பிடித்த மணப்பெண்.. வேறு பெண்ணுடன் நடந்த திருமணம்.! 

#கடலூர் : ஆடி, பாடி வரவேற்பு.. அதிகாலையில் ஓட்டம் பிடித்த மணப்பெண்.. வேறு பெண்ணுடன் நடந்த திருமணம்.! 


ulunthurpet women escaped from marriage

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கும் உளுந்தூர்பேட்டை அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் 20 வயது பெண் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நேற்று முன்தினம் இவர்களுக்கு உளுந்தூர்பேட்டை அருகில் இருக்கும் மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. நேற்று முன் தினம் இரவு பெண் அழைப்பு மற்றும் வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. 

Ulunthurpet

அப்போது வரவேற்பு  முடிந்தவுடன் மணப்பெண் மற்றும் மணமகன் வீட்டினர் இருவரும் மண்டபத்தில் தங்கி மறுநாள் காலை திருமணத்திற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்று காலை 3 மணி அளவில் பெண்ணை காணவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் இரு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அந்த பெண்ணுக்கு  திருமணத்தில் விருப்பமில்லை என்பது தெரிய வந்துள்ளது. 

Ulunthurpet

பின், மணமகன் மற்றும் மணப்பெண் வீட்டினர் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர். அப்போது ஒரு பொது நபர் இருவரையும் சமாதானப்படுத்தி, வேறொரு உறவினர் பெண்ணை அதே மணமகனுக்கு குறித்த நேரத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.