அரசியல் தமிழகம்

சூப்பர் அண்ணா! தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் செய்த காரியம்! என்னனு பார்த்தீர்களா!!

Summary:

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்நி

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை தட்டுப்பாடு போன்றவை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் அவர்கள் கொரோனாவை எதிர்கொள்ள நிவாரண நிதி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்ததை தொடர்ந்து திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களால் முடிந்த தொகையை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்தநிலையில் நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார். இத்தகைய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த அவர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியளிப்போம். ஒன்றிணைந்து செயல்பட்டு பெருந்தொற்றை வெல்வோம் என பதிவிட்டுள்ளார்.


Advertisement