அரசியல் தமிழகம் சினிமா

பதவி ஏற்புவிழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த உதயநிதி ஸ்டாலினின் மாஸ்க்! அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா??

Summary:

திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் அணிந்திருந்த மாஸ்க் அனைவராலும்

திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் அணிந்திருந்த மாஸ்க் அனைவராலும் பெருமளவில் கவரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை மே 2 கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து திமுக தலைவரான ஸ்டாலின் அவர்கள் இன்று முதல்வராக பொறுப்பேற்றார்.

அந்த விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஸ்டாலின் குடும்பத்தினர், எதிர்க்கட்சி தலைவர்கள் என பலரும் பங்கேற்றனர். பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை தமிழக முதல்வராக பதவி பிரமாணம் செய்துவைத்தார்.அத்துடன் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

 இதற்கிடையில் பதவியேற்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் அணிந்திருந்த மாஸ்க் அதில் எழுதியுள்ள வசனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது உதயநிதி ஸ்டாலின் அணிந்திருந்த மாஸ்க்கில் நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
    


Advertisement