லாரி மீது பாய்ந்த இருசக்கர வாகனம்.. இளைஞர்கள் 2 பேர் பலி..!

லாரி மீது பாய்ந்த இருசக்கர வாகனம்.. இளைஞர்கள் 2 பேர் பலி..!


Two-wheeler crashed into a lorry.. 2 youths were killed..!

செங்கல்பட்டு அடுத்த திமாவரத்தில் வசித்து வருபவர் ஏழுமலை மற்றும் விமல் ராஜ். இவர்கள் இருவரும் மறைமலை நகரில் உள்ள சிப்காட் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு பணி முடிந்து இருவரும் இருசக்கர வாகனமான பல்சரில் உடன் பணி புரியும் சுனில் குமார் என்பவரை அழைத்துக் கொண்டு ஜி.எஸ்.டி சாலையில் சென்றுள்ளனர்.

இந்த இருசக்கர வாகனத்தை விமல் ராஜ் ஓட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது இருசக்கர வாகனமானது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற சரக்கு லாரியின் பின்புறம் மீது அதி பயங்கரமாக மோதியது.

accident

இந்த விபத்தில் ஏழுமலை மற்றும் விமல் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சுனில் ராஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.