BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பெற்றோர்களே எச்சரிக்கை... நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...
கும்பகோணம் மாவட்டத்தில் உள்ள எருத்துக்கார தெருவை சேர்ந்த 10 ஆம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவர் ஹரிராஜன். மேலும் ஐயங்கார் தெருவை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படித்து வரும் பிரசன்னா ஆகியோர் விடுமுறை தினத்தை முன்னிட்டு நண்பர்களுடன் திருமலை ராஜன் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது அரைகுறையான நீச்சல் மட்டுமே தெரிந்த இருவரும் நீரில் ஷட்டர் அருகே உள்ள ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென இருவரும் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் விரைந்து சென்று ஹரிராஜன் மற்றும் பிரசன்னா குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். அவர்கள் வந்து இருவரின் உடலையும் மீட்டுள்ளனர். பின்னர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.