கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு.! கொரானா பதித்த நபர்கள் போலி முகவரி கொடுத்து விட்டு எஸ்கேப்.!



two possitive case in koyambedu market

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தநிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், சமீப காலமாக கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வந்தது.

அதேபோல் தமிழகத்திலும் கொரோனா பரவல் குறைந்துகொண்டே வந்தது. ஆனால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் சற்று அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ஆனால் அவர்கள் போலியான முகவரியை கொடுத்து விட்டு தப்பியதால், அவர்களை கண்டுபிடித்து தரும்படி போலீசில் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் கொடுத்துள்ளனர்.

ஆரம்பத்தில், சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்ற பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பரவலில் மையப்புள்ளியாக கோயம்பேடு சந்தை மாறியது இதனையடுத்து கொரோனா பாதிப்பு காரணமாக கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது.

corona

இதனையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னர் கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கோயம்பேடு சந்தையில் பணிபுரிபவர்கள் மற்றும் சந்தைக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து, அவர்களின் முகவரிகள், செல்போன் நம்பர்கள் பெறப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த 11 ஆம் தேதி கொரோன பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 2 பேருக்கு பாசிட்டிவ் என தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் அளித்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்துவைக்கப்பட்டிருந்தது. அவர்களுது  முகவரியும் தவறாக இருந்துள்ளது. இந்தநிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட அந்த 2 பேரையும் கண்டுபிடித்து தரும்படி காவல்நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர்.