ஒரே தொகுதியில் போட்டியிட 2 காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல்..! நிர்வாகிகள் குழப்பம்..Two candidates nominated for single party

ஒரே தொகுதியில் ஒரே கட்சியை சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த சம்பவம் நடந்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தலில் போயிடும் வேட்பாளர்கள் தற்போது வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நீதிராஜன் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தான் தான் காங்கிரஸ் வேட்பாளர் என்று கூறி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பொதுவாக வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் அவர்கள் போட்டியிடும் கட்சி சார்பில் அளிக்கப்படும் படிவம் எ என்ற பிரமாண பத்திரத்தையும் வேட்புமனு தாக்கல் செய்யும்போது சமர்பிக்க வேண்டும். ஆனால் நீதிராஜனிடம் அந்த பிராமண பாத்திரம் இல்லாமலையே வேட்புமனு தாக்கல் செய்துள்ளநிலையில், விரைவில் கட்சி தனக்கு பிரமாண பாத்திரத்தை கொடுக்கும் என்றும், பின்னர் அந்த படிவத்தை சமர்பிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.