நள்ளிரவில் ஃபாஸ்ட் ரைடு., எமனைத்தேடி பயணித்து 2 இளைஞர்கள் அகால மரணம்..! அதிவேகம் ஆபத்து..!!  

நள்ளிரவில் ஃபாஸ்ட் ரைடு., எமனைத்தேடி பயணித்து 2 இளைஞர்கள் அகால மரணம்..! அதிவேகம் ஆபத்து..!!  


two boys death by two wheeler accident

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் அச்சரப்பாக்கம் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சார்ந்தவர் ஜெகன். இவரது மகன் சஞ்சய் (வயது 21). இவர் வீட்டில் டிஷ் ஆண்டனாக்களை பொருத்தும் வேலை செய்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவரது மகன் சஞ்சய் (வயது 19). இவர் 12 ஆம் வகுப்பு பயின்று வந்தார். 

இவர்கள் இருவரும் நண்பர்களான நிலையில், தொழுப்பேடு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 02:30 மணியளவில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கம் அடுத்த தேன்பாக்கம் கூட்ரோடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தனர். 

accident

கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் முன்னால் சென்ற வேன் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின் இந்த விபத்து குறித்து அறிந்த அச்சரப்பாக்கம் காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில் அம்மணம்பாக்கம் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில், பலியான இருவரின் நண்பரான தொழிப்பேடு பகுதியை சேர்ந்தவர் கலந்து கொண்டதால் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டு வந்தபோது இருவரும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.