ஓசூரில் பயங்கரம்... தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி படுகொலை.!! மர்ம நபர்கள் வெறி செயல்.!!



tvk-member-brutally-murdered-by-unidentified-people-pol

ஒசூரில் உள்ள சொங்கோடசிங்கனள்ளியைச் சோ்ந்த ரவிசங்கா் (35). இவர் பன்றி வளா்க்கும் தொழில் செய்து வருகிறாா். இவா் தமிழர் வாழ்வுரிமை கழகம் கட்சியின் கெலமங்கலம் கிழக்கு ஒன்றியப் பொருளாளராக இருந்தார். இந்நிலையில், ராயக்கோட்டை அஞ்சாளம் பகுதியில் இவர் சென்ற போது மா்மநபா்கள் இருவா், இவரை விரட்டி சென்று அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினா்.

காயங்களுடன் கீழே விழுந்த ரவிசங்கரை அப்பகுதி மக்கள் மீட்டு  ராயகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே ரவிசங்கா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

tamilnadu

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில்  தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இவரை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை  தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி‌ மக்களை அதிர்ச்சியடையச் செய்தது.

இதையும் படிங்க: "ஐயோ கொன்னுட்டாங்களே..." துண்டான ரவுடி தலை.!! விலகாத மர்மம்.!!

இதையும் படிங்க: #JustIN: வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிப்படுகொலை; பரமக்குடியில் பரபரப்பு.!