நடிகர் சித்தார்த்தின் முதல் மனைவி யார் தெரியுமா? இப்ப என்ன செய்கிறார் தெரியுமா?
"பாஜக நிர்வாகி அழகியுடன் உல்லாசம்..." வீடியோ எடுத்த விஜய் கட்சி பிரமுகர்.!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்.!!
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி அரை நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் சூர்யகுமார். இவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக இருந்து வருகிறார். சூர்யகுமாரும் பாஜக கட்சியைச் சேர்ந்த விக்னேஸ்வரனும் நண்பர்கள். இந்நிலையில் பாஜக நிர்வாகி விக்னேஸ்வரன் அழகியுடன் உல்லாசமாக இருப்பதை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்திருக்கிறார் சூர்யகுமார். மேலும் தான் பதிவு செய்த வீடியோவை விக்னேஸ்வரனின் மனைவிக்கு செல்போன் மூலமாக அனுப்பி வைத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து விக்னேஸ்வரன் மற்றும் அவரது மனைவியிடையே குடும்ப தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதன் பிறகு விக்னேஸ்வரனின் மனைவி அவரைப் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் விக்னேஸ்வரன் தனது நண்பரான சூர்யகுமார் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். மேலும் தனது மனைவி பிரிந்து சென்றதற்கு காரணமாக இருந்த சூர்யகுமாரை தண்டிக்க முடிவு செய்த விக்னேஸ்வரன் மது அருந்தலாம் என்று கூறி பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: போதை வெறியில் மகன் படுகொலை.!! தந்தை சரண்.!!
இதனையடுத்து சூர்யகுமாரை அரை நிர்வாணமாக்கி கடுமையாக தாக்கியிருக்கிறார். மேலும் அதனை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த தாக்குதலின் போது தன்னை விட்டு விடுமாறு சூர்யகுமார் கெஞ்சியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த சூர்யகுமாருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஸ்வரனை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "காச வாங்குனா குடுக்க மாட்டியா"...? பெண்களிடம் எகிறிய ஊழியர்.!! சம்பவம் செய்த தாத்தா.!!