நான் என்னடா பண்ணேன்.? நான் காரில் வரவே இல்லை..! விபத்து குறித்து விளக்கம் அளித்த டிடிஎப் வாசன்..!ttf-vasan-about-car-accident

டிடிஎஃப் வாசன் சமூகவலைத்தளத்தில் பைக் ரேஸ் மூலம் பிரபலமானவர். இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக கல்லூரி பருவமுடைய இளைஞர்கள் இவர் மீது வெறியாக இருப்பார்கள். 

இவரை போல பைக் ரேஸ், பைக் ரைட் விரும்பிகள் பலர் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். அவ்வப்போது இவர் பல சர்ச்சைகளில் சிக்கி போலீஸ் கேஸ் என்று சென்று வருவார். 

டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முதல் போஸ்டர் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனால், மஞ்சள் வீரன் படப்பிடிப்புக்காக சென்னையில் இருக்கிறார்.

TTF Vasan

இந்த நிலையில், சென்னை அமைந்தகரை அருகே டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது என்றும், பின், அவர் அந்த காரில் இருந்து இறங்கி ஆட்டோவில் ஏறி சென்றார் என்றும் செய்தி வெளியானதை தொடர்ந்து, தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், நான் அந்த காரில் செல்லவில்லை என்றும், தவறான தகவல்கள் பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். மேலும் அந்த காரில் மஞ்சள் வீரன் பட இயக்குனர் சென்றதாகவும், இரவு பகல் தூங்காமல் வேலை செய்துவந்தால், கார் ஓட்டியபோது கண் அயர்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வளர்ந்து வரும் தன்னை டார்கெட் செய்வது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.