கார் - சரக்கு வாகனம் மோதி பயங்கர விபத்து.. 6 பேருக்கு காத்திருந்த அதிஷ்டம்.. பகீர் காட்சிகள்.!

கார் - சரக்கு வாகனம் மோதி பயங்கர விபத்து.. 6 பேருக்கு காத்திருந்த அதிஷ்டம்.. பகீர் காட்சிகள்.!


tripur-road-accident-issue

சரக்கு வாகனத்தில் மீது சொகுசுக்கார் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகாமையில் பொல்லிக்காளிபாளையத்தில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று பொங்கலூர் பகுதிக்குச் சென்றுள்ளது. அப்போது கோயம்புத்தூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரமாக ஓட்டுநர் சரக்குவாகனத்தை நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து அவர் தேனீர் அருந்தி விட்டு சிறிது நேரம் கழித்து புறப்பட தொடங்கிய நிலையில், பின்புறம் வரும் வாகனத்தை பார்க்காமல் வலதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது பின்னால் வந்த சொகுசு கார் ஒன்று சரக்கு வாகனத்தின் மீது வேகமாக மோதியுள்ளது.

tripur

இதில் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக 6 பேரும் உயிர் தப்பியுள்ளனர். தொடர்ந்து சொகுசு கார், சரக்கு வாகனத்தில் மீது மோதும் காட்சிகள் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவான காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.