பனியன் தொழிலாளி குத்தி கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்..!

பனியன் தொழிலாளி குத்தி கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்..!


tripur-men-murdered-by-3-mens

பனியன் நிறுவன தொழிலாளி ஒருவரை, மர்ம நபர்கள் கத்தியால் குத்திக் கொன்ற பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியில் வசித்து வருபவர் கோபால் (வயது 37). இவரது மனைவி சுசீலா. தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இதனை தொடர்ந்து, கோபால் சின்னகரை பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில், தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர், அவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் கோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

tripur

இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக பல்லடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாங் தலைமையிலான காவல்துறையினர் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் கோபாலை கொலை செய்தது யார்? எனவும், கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.