தமிழகம்

காதல் மனைவி இறந்ததால் கணவன் விபரீத முடிவு... ரயில் முன் பாய்ந்த பரிதாபம்... உறவினர்கள் சோகம்..!

Summary:

காதல் மனைவி இறந்ததால் கணவன் விபரீத முடிவு... ரயில் முன் பாய்ந்த பரிதாபம்... உறவினர்கள் சோகம்..!

மனைவி இறந்த விரக்தியில் கணவன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கந்திலியை சேர்ந்தவர் சங்கீதா. இவருக்கும், குனிச்சி பகுதியை சேர்ந்த மேகநாதன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த சங்கீதாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பெங்களூரில் இருந்த அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பத்தூருக்கு வந்த கணவர், மனைவி இறந்த மனவிரக்தியில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். 

பின் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மேகநாதனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement