புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 47 வயது கூலித்தொழிலாளி கைது..!
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூலித் தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், ஜீவா காலனி பகுதியில் வசித்து வருபவர் மூர்த்தி (வயது 47). இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை தனியாக அழைத்து, சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து அழுதுகொண்டே தெரிவித்த நிலையில், அவர்கள் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், சிறுமிக்கு மூர்த்தி பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. தொடர்ந்து மூர்த்தியின் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து காவல்துறையினர் கைது செய்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.