நாடகக்காதல் வலைவீசி லவ் ஜிகாத்.. மதம்மாற மறுத்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பயங்கரம்.. திருப்பூரில் அதிர்ச்சி.!

நாடகக்காதல் வலைவீசி லவ் ஜிகாத்.. மதம்மாற மறுத்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பயங்கரம்.. திருப்பூரில் அதிர்ச்சி.!



tripur-boy-arrested-for-spreading-lover-private-photo

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஒன்றாக வசித்து வந்த பெண்ணை மதம் மாறுமாறு மிரட்டி, அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இமான் ஹமீப் என்பவர், கரூரை சேர்ந்த 21 வயதுடைய பெண்ணை காதலித்துள்ளார். மேலும், பெண்ணிடம் வாழைப்பழமாய் பேசி ஆசைவார்த்தை கூறி, தன்னுடன் அழைத்து வந்து திருப்பூரில் 2 மாதங்கள் ஒன்றாக இருவரும் வசித்துள்ளனர்.

இந்த நிலையில், திடீரென அந்தப் பெண்ணை இமான் ஹமீப் மதம் மாறுமாறு வற்புறுத்திய நிலையில், பெண் இதனை ஏற்காத காரணத்தால் தகராறு செய்துள்ளார். 

இதனால் கோபமுற்ற பெண் அவரை பிரிந்து சென்றதால், இமான் ஹமீப் என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கிறார்.

tripur

இந்த விஷயம் தொடர்பாக பெண்ணிற்கு தெரியவர, அவர் இமான் ஹமீப் மீது சமூகவலைதளங்களில் அந்தரங்கப்படங்களை பரப்பி வருவதாக கடந்த 4ஆம் தேதி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணை கொடுமை செய்தது, அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டது, மதம் மாற வற்புறுத்தியது என்ற சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.