பற்பசைக்கு பதிலாக எலிப்பசையில் பல்துலக்கிய பெண்மணி பலி; தூக்க கலக்கத்தில் சோகம்.!!trichy-women-died-using-rat-paste

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே.நகர், சாத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் சின்னத்தம்பி (வயது 35). இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். சின்ன தம்பியின் மனைவி ரேவதி (வயது 27). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். தம்பதிகளுக்கு மகன், மகள் இருக்கின்றனர். 

எலிப்பசையில் பல்துலக்கிய பெண்மணி

இந்நிலையில் காலை நேரத்தில் உறக்க கலக்கத்தில் இருந்த ரேவதி பற்பசை என நினைத்து எலிக்கு வைக்கும் விஷத்தை எடுத்து பல் துலக்கி இருக்கிறார். இதன் பின் மாலை நேரத்தில் பணி முடிந்து வீட்டிற்கு வந்த ரேவதி வாந்தி எடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: கிரேன் சக்கரம் ஏறி-இறங்கி பயங்கர விபத்து; விசிக மகளிரணி செயலாளர் உடல் நசுங்கி பலி..!

மருத்துவமனையில் அனுமதி

இதனால் அதிர்ந்து போன குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்கு அனுமதித்தபோது, எலி விஷம் கலந்த பொருள் அவரது உடலில் இருப்பதாக முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 death

பெண்மணி உயிரிழப்பு

இதனையடுத்து விசாரித்த போது காலையில் எலிபசையை பற்பசை என நினைத்து பல்துலக்கியது உறுதியானது. பின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்ட பெண்மணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது சோகம்; முதியவர் கார் மோதி பரிதாப பலி.!