அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
ரயில்நிலையத்தில் கவர்ச்சி நடனமாடிய இளம்பெண்கள்; ரீல்ஸ் பெயரில் அட்ராசிட்டிஸ்.!!
கடந்த 2003-ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் மாதவன், பூஜா, கலாபவன் மணி, டெல்லி கணேஷ், பிரியங்கா கோதாரி, தாமு, மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ஜேஜே. ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் பரத்வாஜ் இசையில் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
காலம் கடந்தும் ரசிக்கப்படும் பாடல்
மேலும் காதலர்கள் மத்தியில் இன்று வரை மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படமாகவும் இருக்கிறது. இப்படத்தில் "மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே" என்ற பாடல் காலம் கடந்தும் ரசிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பால்கனியில் இருந்து தவறி விழுந்த பச்சிளம் குழந்தையை மீட்ட அக்கம் பக்கத்தினர்; பதறவைக்கும் வீடியோ உள்ளே.!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்
தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என பாடல் சித்தரிக்கப்பட்டு பயனரின் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டாலும், ஒரு சில பழைய பாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்பும் இன்றுவரை தொடர்ந்து வருகிறது.
அரைகுறை ஆடையுடன் நடனம்
அந்த வகையில் மே மாதம் 98 பாடலுக்கு இன்ஸ்டாகிராம் பயனர்களான சில பெண்கள் திருச்சி ரயில் நிலையத்தில் அரைகுறை ஆடையுடன் நடனமாடி இருக்கின்றனர். இதனையடுத்து ரயில் நிலையத்தில் சர்ச்சை செயலை மேற்கொண்ட இளம் பெண்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
ரயில்வே விதிமுறைப்படி அபராதம்
ரயில்வே விதிமுறைகளின்படி அனுமதியின்றி இவ்வாறான ரில்ஸ் வீடியோக்களை ரயில் நிலையங்களுக்குள் வைத்து தயாரிப்பது அபராதத்திற்கும், தண்டனைக்கும் வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இயற்கை உபாதையை கழிக்க சென்ற 2 இளைஞர்கள் துடிதுடித்து மரணம்.! மின்வேலியில் சிக்கி பயங்கரம்.!!