பத்தல, பத்தல.. வரதட்சணை போதவில்லை என மனைவியை தொந்தரவு செய்த கணவன்..!Trichy Dowry Issue Girl File Complaint Against

திருச்சி மாவட்டத்தில் உள்ள உய்யகொண்டான், திருமலை எம்.எம். நகரில் வசித்து வருபவர் ஸ்ரீ பிரணவி (வயது 23). மணப்பாறை வடுக்கப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர்கள் இருவருக்கும் கடந்த 2019 மே மாதம் திருமணம் நடைபெற்று முடிந்தது. 

தம்பதிகளுக்கு ஒன்றரை வயதுடைய சேஷா தரணி என்ற குழந்தை இருக்கிறது. தம்பதிகளின் திருமணத்தின் போது பிரணவி குடும்பத்தார் சார்பாக 20 சவரன் நகைகள் மற்றும் வீட்டு பொருட்கள், ரூ.1 இலட்சம் ரொக்கம் போன்றவை வரதட்சணையாக மணிகண்டனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

திருமணத்திற்கு பின்னர் மனைவியை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தொந்தரவு செய்து வந்த மணிகண்டன், கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளார். இதனால் ஸ்ரீ பிரணவி திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரை ஏற்ற அதிகாரிகள் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.