திடீரென சாலையின் குறுக்கே புகுந்த நாய்.. விபத்தில் சிக்கிய காவலர்.. அதிர்ச்சி வீடியோ.!!



Trichy Cop Accident Dog Hit Officer Bike CCTV Footage

நாய் திடீரென சாலையின் குறுக்கே புகுந்ததால், அவ்வழியாக சென்ற ஆயுதப்படை காவல் அதிகாரி விபத்தில் சிக்கினார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

திருச்சி மாநகர ஆயுதப்படை காவல் அதிகாரி பாசில் கான். இவர் சம்பவத்தன்று, பணிநிமித்தமாக சாலையில் சென்றுகொண்டு இருக்கையில், நாய் மோதி விபத்திற்குள்ளானார். அவர் தலைக்கவசம் அணிந்திருந்த நிலையில், அவரது தலையில் காயம் ஏதும் ஏற்படாமல், உடலில் காயத்தோடு உயிர்தப்பினார். 

அவரை மீட்ட பிற வாகன ஓட்டிகள் விரைந்து அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. இதுகுறித்த கண்காணிப்பு கேமிரா காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில், சாலையின் ஒருபுறம் இருந்த நாய், சாலையை கடக்க முயற்சித்துள்ளது. 

trichy

அப்போது, அந்த நாய் அவ்வழியாக வந்த வாகனம் மீது மோதிவிடவே, சுதாரித்த வாகன ஒட்டி வாகனத்தை நிலைப்படுத்திவிட்டார். வாகனத்தில் மோதிய பதற்றத்தில் இருந்த நாய், சாலையின் நடுவே உள்ள கான்கிரீட் தடுப்பு வழியாக எதிர்திசை சாலையில் குதிக்கவே, அவ்வழியாக வந்த காவல் அதிகாரி பாசில் கான் விபத்தில் சிக்குகிறார். 

இந்த சம்பவம் அடுத்தடுத்து நொடிப்பொழுதில் நடந்துவிடுகிறது. நாயை இடித்தும் நிலைதடுமாறி காவலரின் வாகனம் கீழே விழுந்துவிட, காவல் அதிகாரி சாலையில் சிலஅடிதூரம் உருண்டு சென்று இருக்கிறார். அவரது தலைக்கவசம் முதலில் அவரது தலையில் இருந்த நிலையில், பின்னர் அது கழன்று தனியே செல்கிறது. தலையில் பலத்த காயம் ஏதும் ஏற்படாமல் கை-கால்களில் காயத்துடன் தப்பித்து விடுகிறார். நல்ல வேலையாக அவருக்கு பின்னால் கனரக வாகனம் ஏதும் வரவில்லை. 

தலைக்கவசமே உயிர்கவசம்.. தலைக்கவசம் அணிவோம், விபத்து ஏற்பட்டாலும் உயிரை பாதுகாத்துக்கொள்வோம்.