BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
#மீண்டும் சோகம்: ஆன்லைன் ரம்மியால் கல்லூரி மாணவர் இரயில் முன்பாய்ந்து தற்கொலை..!
ஆன்லைன் ரம்மி கேமுக்கு அடிமையாகி இருந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் தங்கியிருந்து பயின்று வருகிறார்.
இந்நிலையில், சந்தோஷ் ஆன்லைன் ரம்மி கேமுக்கு அடிமையாகி இருந்த நிலையில், அவர் பணம் செலுத்தி விளையாடி வந்துள்ளார். காலப்போக்கில் அதனால் அதிக பணத்தை இழந்துள்ளார்.

விட்டதை பிடிக்கிறேன் என்று நண்பர்களிடமும் கடன் வாங்கி அவர் விளையாடி இருக்கிறார். இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப கேட்க, விரக்தியடைந்தவர் தற்கொலை செய்துள்ளார்.
இரயில் முன் பாய்ந்து சந்தோஷ் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணை நடந்து வருகிறது.
தமிழர்களின் உயிரை குடிக்கும் செயலிக்கு தமிழ் நடிகர்கள் விளம்பரதாரராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.