இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த திருநங்கை: சுவாரசிய வழக்கால் பரபரப்பு..!

இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த திருநங்கை: சுவாரசிய வழக்கால் பரபரப்பு..!


Transgender who cheated and married a young woman

கடலூர், சிவராமன் நகர் பகுதியை சேர்ந்தவர் சோபனா தேவி (30). சீர்காழி அருகேயுள்ள  செம்மங்குடி பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (35). இவர்கள் இருவருக்கும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ஹரி கிருஷ்ணன் திருமணத்துக்கு பிறகு ஷோபனா தேவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.

இதன் காரணமாக, தம்பதியினர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. மேலும் ஷோபனா தேவி, தனது கணவரான ஹரி கிருஷ்ணனை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என அழைத்துள்ளார். ஆனால் அதனை ஹரி கிருஷ்ணன் மறுத்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஹரிகிருஷ்ணன் ஷோபனா தேவியை, தாக்கி மான பங்கம் படுத்தியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் ஹரி கிருஷ்ணன் திருநங்கையாக இருந்து வரும் நிலையில் தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக சோபனா தேவி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்துறையினர் கணவர் ஹரி கிருஷ்ணன், அவரது தாயார் புஷ்பா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூரில் திருநங்கையாக இருந்து வந்த நபர் இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.