BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
சுதந்திர தின விழா முடிந்ததும் அரங்கேறிய துயரம்: வீடு திரும்பிய மாணவர் பரிதாப பலி..!
தூத்துக்குடி மாவட்ட,ம் கோவில்பட்டி அருகேயுள்ள லட்சுமி மில் மேலக்காலனி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் ஸ்ரீபுஷ்பராஜ் (15). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், ஸ்ரீபுஷ்பராஜ் நேற்று காலை சுதந்திர தின கொடியேற்று விழாவுக்காக மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார்.
சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் முடிந்து சுமார் 11 மணியளவில், கொண்டிருந்தார். கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் எதிரே சர்வீஸ் ரோட்டில் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது அவரது மோட்டார் சைக்கிளுடன், மற்றொரு மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. இந்த எதிர்பாராத விபத்தில், மாணவர் ஸ்ரீபுஷ்பராஜூம், மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த சங்கனப்பேரியை சேர்ந்த இறைவன் (40) என்பவரும் படுகாயம் அடைந்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தோர், ஸ்ரீபுஷ்பராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறைவன் தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்றுக் கொண்டு, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார்.
இந்த விபத்து குறித்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுதந்திர தின விழாவில் பங்க்கேற்று வீடு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.