விரட்டி விரட்டி கடித்த கரடி: வனப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது விபரீதம்..!

விரட்டி விரட்டி கடித்த கரடி: வனப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது விபரீதம்..!


Tragedy happened when the bear bitten the cow while chasing it away in the forest

ஈரோடு மாவட்டம், கடம்பூர் அருகேயுள்ள கோட்டமாளத்தை சேர்ந்தவர் திம்மையன் (45). இவர் கூலி தொழிலாளி. இவர் நேற்று கோட்டமாளம் வனப்பகுதியையொட்டி மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று, திடீரென அந்த கரடி திம்மையனை தாக்க தொடங்கியது.

கரடியின் தாக்குதலை சமாளிக்க முடியாத திம்மையன் சத்தம் போட்டு கதறினார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று கரடியை விரட்டி திம்மையனை மீட்டனர். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதன் பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கோட்டமாளம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.