நீங்க எல்லாம் அடங்க மாட்டீங்களா..? பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்..!

நீங்க எல்லாம் அடங்க மாட்டீங்களா..? பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்..!


tragedy-happened-to-a-student-who-was-traveling-by-hang

திருவள்ளூர் அடுத்த கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் பிரபு- செண்பகம் தம்பதியினர். இவர்களது மகன் மணவாளநகரில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் அங்கிருந்து அரசு மாநகர பஸ்ஸில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அவர் சென்ற பேருந்தில் கூட்டம் அதிகமாக இருக்கவே உள்ளே செல்ல முடியாமல் மாணவர் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்துள்ளார். இதையடுத்து அரண்வாயில் பகுதியில் உள்ள வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கும் போது படிக்கட்டில் தொங்கியவாறு சென்ற மாணவன் நிலை தடுமாறி விழுந்ததில் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தான்.

Student accident

மேலும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மாணவரை மீட்டு உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் மாணவர். அங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாணவனின் தாயார் செண்பகம் கொடுத்த புகாரின்படி செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் ஜெகதீசன் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.