ஓடும் ரயிலில்.. இளம்பெண் செய்த அதிர்ச்சி காரியம்.! மருத்துவமனையில் அனுமதி.!

ஓடும் ரயிலில்.. இளம்பெண் செய்த அதிர்ச்சி காரியம்.! மருத்துவமனையில் அனுமதி.!



tragedy-befell-a-north-mana-girl-at-tirupur-railway-sta

ஒடிசா மாநிலம் பர்கீஸ் என்ற பகுதியைச் சேர்ந்த நபர் தான் கபில் பகிரா. இவருடைய மனைவி காயத்ரி பகிரா வயது 27  இருவரும் குடும்பத்தோடு தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கோவை, மதுரை போன்ற பகுதிகளிலிருக்கின்ற சுற்றுலா தலங்களை கண்டு களிப்பதற்காக தொடர்வண்டியின் மூலமாக, தமிழகத்திற்கு வந்தனர்.

Tirupur

சென்ற 11ஆம் தேதி கோயமுத்தூர் ஈஷா யோகா மையத்திற்கு சென்று விட்டு, அதன் பிறகு குடும்பத்தோடு, கடந்த 12ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வருகை தந்தனர். அங்கிருந்து திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு செல்லும் தொடர் வண்டியில் ஏற முடிவு செய்தனர்.

அதிகாலை 2:55 மணியளவில் அந்த தொடர்வண்டி திருப்பூர் ரயில் நிலையத்தில் 2வது நடைமேடையில் வந்து நின்றது. அவர்கள் ஏற வேண்டிய பெட்டி நிற்குமிடம் தெரியாமல், அவர்கள் தொலைவில் நின்றதாக சொல்லப்படுகிறது. எல்லோரும் ஏறுவதற்குள் ரயில் கிளம்ப தொடங்கியது. அந்த சமயத்தில், திடீரென்று காயத்ரி கைக்குழந்தையோடு ஓடி வந்து ரயில் படிக்கட்டில் ஏற முயற்சி செய்தார்.

Tirupur

அப்போது திடீரென்று அவர் தவறி கீழே விழுந்தார். நடைமேடைக்கும், ரயிலுக்கு இடையே விழுந்து, அவர் படுகாயமடைந்தார். கையில் வைத்திருந்த குழந்தை நடைமேடையில் விழுந்ததால், பயணிகள் ஓடி சென்று, அந்த குழந்தையை மீட்டு விட்டனர். இதனைத் தொடர்ந்து, உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தால் காயத்ரி பகிராவுக்கு இடுப்பு மற்றும் வலது கை போன்ற பகுதிகளில் பலத்த காயமுண்டாகியிருக்கிறது. அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, திருப்பூர் ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.