தேர்ச்சியில் முதலிடம்!!.. பள்ளி கல்வித்துறை அதிகாரிகளின் தில்லாலங்கடி வேலை!: வைரலாகும் தகவல்...!!

தேர்ச்சியில் முதலிடம்!!.. பள்ளி கல்வித்துறை அதிகாரிகளின் தில்லாலங்கடி வேலை!: வைரலாகும் தகவல்...!!



Top in Passing.. Dillalangadi Job of School Education Officers!: Viral Information...

மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதால், காப்பி அடிக்க அனுமதிக்கப்படுவதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

அரசு பள்ளிகள், பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதால், ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் காப்பி அடிக்க அனுமதிக்கப்படுகின்றனர், என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல், பள்ளிக் கல்வித் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் மாவட்ட முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், ஒவ்வொரு வருடமும் பொதுத் தேர்வுகளின் போது அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்று உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதால், பள்ளி ஆசிரியர்களும், முதன்மை கல்வி அலுவலர்களும், காப்பியடிக்க மாணவர்களை அனுமதிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். 

பெரம்பலூர் மாவட்டம், ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் கல்வி தேர்ச்சியில் முதலிடங்களை பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கல்வித் துறையின் தற்போதைய ஆணையர் நந்தகுமார், பெரம்பலூர் ஆட்சியராக இருந்த போது, இதே போல நெருக்கடி கொடுத்து மாணவர்களை பார்த்து எழுத அனுமதித்ததாகவும், இந்த வருடமும் அதே போல் தான் நடக்கப் போகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த அறிக்கை, பள்ளிக்கல்வித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.